கும்மி பாடல்
ஆலமரம் ஏலேலோ
அரசமரம்... அரசமரம்...
அதுலரெண்டு குருவிங்க
ஆடுதுபார் ஊஞ்சலு ஊஞ்சலு...
வேடன் ஒருத்தன் வந்திட்டான்
வில்லெடுத்து புடிச்சிட்டான் புடிச்சிட்டான் ..
மாட்டிக்கிட்ட குருவிரெண்டும்
மனசுக்குள்ள பேசிச்சான்
பேசிச்சான்...
பேசிச்சான்...
பாட்டுபாடி நாங்கருந்த
பச்சமரம் காணல காணல ...
கூடுகட்டி நாங்கருந்த
காடுவழி காணல காணல ...
ஒன்றுகூடி நாங்கதின்ன
உறவுகல காணல காணல ...
ஊருக்குள்ள சாதிசண்ட
உசுரகுடிச்சி போகுதே போகுதே ...
காட்டுக்குள்ள அந்தசண்ட
கண்ணுக்குள்ள தெரியல தெரியல ...
கூண்டுக்குள்ள அடச்சிபுட்ட
குறத்திமகன் காணல காணல ...
தடியுனும் தாத்தாவுக்கு
தவிக்கிறது புரியல புரியல ...
கூட்டைவிட்டு நாங்கபோக
குரத்திமகன் காணல காணல ...
ஆத்துக்குள்ளே ஏலேலோ
அரசமரம் அரசமரம்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமண் வாசம் மனம் வீசுது...
பதிலளிநீக்கு